சமூக வலைத்தளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்தான் வனிதா-பீட்டர் பாலின் திருமணம். அந்த சமயத்தில் பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததன் மூலம், வனிதாவிற்கும் சினிமா பிரபலங்கள் சிலருக்கும் சண்டை முற்றி குழாயடி ரேஞ்சுக்கு மாறியது.

அதிலும் குறிப்பாக இந்த விஷயத்தில் தலையிட்ட நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனை நேரலையில் வாடி போடி என்று படுமோசமாக வனிதா பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வனிதாவின் மீது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு போட்டார்.

அதைத்தொடர்ந்து வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணன் மீது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து விமர்சிப்பது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் வனிதா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், லஷ்மி ராமகிருஷ்ணன் பிக்பாஸில் கலந்து கொள்வதை குறித்த கேள்விக்கு கிண்டலாக பதிலளித்தார்.  அந்த பேட்டியில் ‘லஷ்மி ராமகிருஷ்ணன் பெரிய பணக்காரி. அவங்களுக்கு பிக் பாஸ் செல்வதற்கு அவசியம் இருக்காது’ என்று கூறியுள்ளார்.

அத்துடன் லஷ்மி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொரு சீசனிலும் நான் கலந்து கொள்ள போவதாக அடிக்கடி பெயர் அடிபடுகிறது. எனக்கு பிக் பாஸ் தேவையில்லை. நான் அதில் கலந்து கொள்ளப் போவதுமில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.