லண்டனில் முகேஷ் அம்பானி வாங்கிய ஸ்டாக் பார்க் மாளிகை.. ஷங்கர் பட செட் போல் பிரம்மாண்ட புகைப்படம்

ஆசியாவில் மிகப்பெரிய செல்வந்தராக வலம் வருபவர் தான் முகேஷ் அம்பானி. ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரான முகேஷ் அம்பானி மகாராஷ்டிராவில் உள்ள ஆண்டிலியாவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கொரோனா பெரும் தொற்றுகாலம் முழுவதும் ஆண்டிலியாவிலேயே நேரத்தை செலவிட்டு வந்தார் முகேஷ் அம்பானி. தற்போது பிரிட்டனிலுள்ள 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோன் பார்க் பங்களாவை 592 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.

அதனால் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் ஏப்ரல் மாதத்தில் பிரிட்டனில் குடியேற போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.அப்போது அதை மறுத்து ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் ஸ்டோன் பார்க் பங்களாவை முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மாற்ற உள்ளதாகவும் இவை அனைத்தும் லண்டன் நிர்வாகத்தின் அடிப்படையில் அமைக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் லண்டன் மற்றும் உலகில் வேறு எங்கும் குடியேற திட்டம் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள். இதனால் முகேஷ் அம்பானி தன் குடும்பத்துடன் ஆண்டில்யாவில் தான் வசித்து வருவார் என தெரிகிறது.