லட்சுமி பிரியாவுக்கு ஆப்பு வைத்த காடர்கள்.. 3ம் உலகத்தில் இருந்து களத்தில் குதித்த விஜயலட்சுமி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் காடர்கள் மற்றும் வேடர்கள் என இரு அணிகளாகப் பிரிந்து போட்டிகளில் விளையாடுகிறார்கள். இந்நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். சர்வைவர் நிகழ்ச்சியில் இரு அணிகளுக்கும் போட்டி நடத்தப்பட்டு தோல்வியுற்ற அணியில் இருந்து ஒருவரை அந்த அணியே தேர்வு செய்து எலிமினேட் செய்ய வேண்டும்.

அந்த வகையில் எலிமினேட் செய்யப்பட்டவர் மூன்றாம் உலகத்திற்குள் செல்வார். சென்ற வாரம் காடர்கள் மற்றும் வேடர்கள் அணிகள் இணைந்து 5 ஜோடிகளாக விளையாடினார்கள். இதில் நந்தா, விக்ராந்த், இனிகோ உமாபதி, ஐஸ்வர்யா வனசா, நாராயணன் லேடி காஷ், சரண் லட்சுமி பிரியா ஆகியோர் ஜோடிகளாக போட்டிகளில் பங்கு பெற்றார்கள்.

போட்டியில் சரண், லட்சுமி பிரியா ஜோடி முதலில் தோற்றது. அர்ஜுன் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்று இரு அணிகளையும் ட்ரைபல் பஞ்சாயத்திற்கு அழைத்து இருந்தார். ட்ரைபல் பஞ்சாயத்திற்கு சென்ற இரு அணிகளும் வேடர்கள் அணியிலிருந்து சரண் மற்றும் காடர்கள் அணியிலிருந்து லட்சுமி பிரியாவையும் தேர்வு செய்து இருந்தார்கள்.

பிறகு இதில் ஒருவர் தான் வெளியேற போகிறார் என அர்ஜுன் சொல்ல இரண்டாவது முறையாக அதிர்ஷ்டவசமாக சரண் எலிமினேஷனில் இருந்து தப்பித்தார். மூன்றாம் உலகத்திற்கு சென்ற லட்சுமி ப்ரியா அங்கு அஜ்மத் மற்றும் விஜயலட்சுமியை பார்த்து ஆச்சரியமடைந்தார். மறுநாள் காடர்கள், வேடர்கள் கூடிய பொழுது மூன்றாம் உலகத்தில் உள்ள மூவரும் களத்திற்கு வந்தார்கள். அவர்களை பார்த்து இரு அணிகளும் உற்சாகம் ஆனார்கள்.

இதிலிருந்து இருவர் மட்டும்தான் வேண்டும் போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஒருவர் நிரந்தரமாக சர்வைவர் இருந்து வெளியேற்றபடுவார் என அர்ஜுன் அறிவித்தார். சர்வைவர் போட்டியாளர்கள் இடமிருந்து அதிக ஓட்டுகள் வாங்கி ஒருவர் உள்ளே செல்லலாம். மற்ற இருவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டு வென்றவர் உள்ளே செல்லலாம் என அர்ஜுன் அறிவித்திருந்தார். அதிக ஓட்டுக்கள் வாங்கி அஜ்மத் வேடர்கள் அணிக்கு சென்றார்.

லட்சுமி பிரியாவுக்கு காடர்கள் அணியிலிருந்து உமாபதியும், விஜயலட்சுமிக்கு வேடர்கள் அணியிலிருந்து ஐஸ்வர்யாவும் உதவினார்கள். எப்பொழுதும் விறுவிறுப்பாக விளையாடும் உமாபதி நேற்றைய போட்டியில் சற்று தொய்வுடன் விளையாடினார். விஜயலட்சுமியும், ஐஸ்வர்யாவும் சிறப்பாக விளையாடி போட்டியில் வென்றார்கள். கடைசியில் விஜயலட்சுமி போட்டியில் வென்று காடர்கள் அணியை தேர்ந்தெடுத்து காடர்கள் அணிக்கு சென்றார். பல திறமைகள் இருந்தும் பசில் குயின் என்ற அழைக்கப்பட்ட லட்சுமி பிரியா சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.