லட்சக்கணக்கில் யூடியூபில் சம்பாதிக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.. எவ்வளவு தெரியுமா?

தற்சமயம் எதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் அதனை யூடியூபில் பார்த்து தெரிந்து அளவுக்கு அத்தனையையும் வீடியோவாக உருவாக்கி பதிவேற்றம் செய்கின்றனர். இதற்கு காரணம் அந்த வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஏற்ப யூடியூப்பில் இருந்து சம்பளம் கிடைக்கும்.

இதற்காகவே கண்டதையெல்லாம் கண்டதாக மாற்றி யூடியூபில் பதிவேற்றம் செய்பவர்தான் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா. இவரைப்போலவே மணிமேகலையும் தன்னுடைய கணவரை கூட்டிக்கொண்டு,

வெவ்வேறு இடங்களை சுட்டிக் காட்டுவதும், அந்த இடத்தில் இருக்கும் விதவிதமான மனிதர்களை சந்திப்பது போன்ற வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுவார்கள். இதிலிருந்து இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

பிரியங்கா ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து 7 லட்சம் சம்பாதித்துள்ளார். அதேபோல் மணிமேகலையும் ஒரு மாதத்தில் 6 லட்சம் வரை இதன் மூலம் சம்பாதிக்கிறாராம்.

இவர்கள் மட்டுமல்ல டிவி ஸ்டார் அனைவரும் தங்களுக்கென்று தனி யூடியூப் சேனலை உருவாக்கி அதில் எப்படி தலை சீவுவது, எப்படி சாப்பிடுவது, எப்படி தூங்குவது என்பது மட்டுமல்லாமல் கார் டூர், பிரிட்ஜ் டூர் என வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் சுற்றி கண்பித்து வீடியோஸ் உருவாக்குகின்றனர்.

தற்போது பிரியங்காவும் மணிமேகலையும் யூடியூபில் சம்பாரிக்கும் விவரத்தை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அத்துடன் நம்மை யூடியூப் பார்த்தா அவங்களுக்கு காசு வருதா! என்ற இந்த விஷயம் தெரியாத சிலரும் உள்ளனர்.

விஷாலை வெளுத்து வாங்கும் சாந்தனு.. இது மக்களுக்கு சம்பந்தமில்லாத வேலை

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. பாக்கியராஜ் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக வாக்கு எண்ணிக்கை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதில் ...