ரோஜா சீரியலில் இனி அஸ்வின் இவர்தான்! தரமான நடிகரை களமிறக்கிய இயக்குனர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள சீரியல்தான் ரோஜா. இதில் கடந்த சில எபிசோடுகளில் பயங்கரமான டுவிஸ்ட்களும், அதிரடியான சீன்களையும் ஒளிபரப்பியதன் மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.

ரோஜா கதாபாத்திரம் எப்போது தனது அம்மா செண்பகத்துடன் இணையப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இச்சூழ்நிலையில் செண்பகம் அம்மாவோ பழைய விஷயங்கள் அனைத்தும் மறந்து விடுகிறார். இவருக்கு பழைய ஞாபகங்களை மீட்டு கொண்டு வருவதற்கு குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க தற்போது அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட் ரங்கநாதன் இந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். தவிர்க்க முடியாத சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தான் விலகுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்துவந்த கதாபாத்திரத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகரால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால் அஸ்வின் கதாபாத்திரத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சன்கரேஷ் ஆவார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை என்ற நாடகத்திலும் வானத்தைப்போல என்ற நாடகத்திலும் நடித்தவர். இவருக்கென ஒரு ரசிகர் வட்டாரம் இருந்துவருகிறது. இவரின் நடிப்பு மிகவும் இயற்கையாக இருக்கும்.

தற்போது இவர் ரோஜா சீரியலுக்கு அஸ்வினாக வருகை தருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே களைகட்டி வரும் ரோஜா சீரியல் தற்போது தாறுமாறாக கலைகட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ரோஜா சீரியல் இயக்குனர் இவரை வைத்து புதுவிதமான சீன்களை எடுக்க திட்டமிட்டு வருவகிறாராம். மேலும் இந்த ரோஜா சீரியலானது தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் டாப் 5 சீரியல்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுட்டுப்போட்டாலும் நடிக்க வராது.. தயாரிப்பாளரின் மகனை விளாசிய இயக்குனர்

மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 8 தோட்டாக்கள், ஜிபி படத்தில் நடித்தவர் நடிகர் வெற்றி. இவர் பிரபல தயாரிப்பாளரின் பழனிச்சாமியின் மகன். தற்போது வெற்றி வனம் என்ற படத்தில் நடித்துள்ளார். வனம் படத்தை இயக்கியவர் ஸ்ரீகண்டன் ...