ரொம்ப பெருமை பட்டுக்காதீங்க நெல்சா.. இது எங்க தலைவர் கதை தானே

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். நெல்சன் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்க உள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் நெல்சன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. முதலில் நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். அதன் பிறகு ரஜினி ஒரு கதையை நெல்சன் இக்கு கொடுத்துள்ளாராம். அதன் பிறகு ரஜினி குடுத்த அவுட்லைனை வைத்து நெல்சன் தற்போது டெவலப் பண்ணி கொண்டிருக்கிறாராம்.

விஜயின் இயக்குனர்கள் அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் போயஸ் கார்டனில் பிளாட் வாங்கி குடியேறிய நிலையில் அந்த லிஸ்டில் மாஸ்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரும் சேர்ந்துள்ளார்.

ஏனென்றால் ரஜினி வீட்டிற்கு பக்கத்திலேயே போயஸ் கார்டனில் ரூம் போட்டு அங்கேயே தங்கியுள்ளாராம் நெல்சன். ஒருவேளை ரூம் போட்டு யோசிக்கிறாரோ நெல்சன் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அப்பதான் அப்பப்ப போய் ரஜினியிடம் எழுதிய கதையை சொல்லி விட்டு வரலாம் என யோசித்து உள்ளார் நெல்சன்.

இதனால் மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்புக்கு முன்னதாகவே இந்த படத்தின் முதல் பாட்டை சிவகார்த்திகேயன் எழுதிக் கொண்டிருக்கிறாராம்.

நெல்சனின் டாக்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரஜினியின் படத்திலும் பாடல் வரிகள் எழுத உள்ளார். பீஸ்ட் படத்தின் அரபி குத்து போல அடுத்தது ரஜினி படத்தில் வேற லெவல் பாட்டு வர உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.