ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் கார்த்திக்.. மனுஷன் ஜெட் வேகத்தில் போயிட்டு இருக்காருப்பா!

தன்னுடைய வசீகர சிரிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்தி. கார்த்திக் சிவகுமார் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான கார்த்தி, முதல் படம் போல இல்லாமல் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்ட இருப்பார். அதிலுள்ள என்ன மாமா சௌக்கியமா என்ற டயலாக் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு துணை இயக்குனராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் .

நடிப்பதோடு மட்டுமல்லாது பல சமூக ரீதியான பணிகளையும் செய்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாய ஆக நடித்த இவர் பின் உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலமாக விவசாயிகளுக்கு பல நல உதவிகளை செய்து வருகிறார் .

தற்போது கார்த்தி படு பிசியாக இருந்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கார்த்தி சர்தார், விருமன் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார்.

10 நாட்கள் இடைவெளியில் இந்த மூன்று படங்களுக்கு கார்த்தி ஒப்பந்தம் செய்துள்ளார். முதலில் எந்த படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் விருமன் திரைப்படத்தை சங்கரின் மகள் நடிக்க இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளது.