ரெமோ படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா.? நாசுக்காக கசிந்த அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆணாகவும் பெண்ணாகவும் நடித்த சிவகார்த்திகேயன் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் பல படங்கள் நடித்து விட்டார். ஆனால் ரசிகர்கள் தற்போது வரை ஒரு சில படங்களின் 2பாகத்தை மட்டுமே கேட்டு வருகின்றனர். அப்படிப்பட்ட படங்களில் ரெமோ படமும் ஒன்று. இப்படத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெட்டும் உயர்ந்தது.

அதுமட்டுமில்லாமல் ரெமோ படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கூட முழுமையாக முடிக்காமல் சஸ்பென்ஸாக முடித்திருப்பார்கள். இதனை வைத்துப் பார்க்கும் போது ரெமோ படத்தின் 2பாகம் உருவாவதற்கு வாய்ப்புள்ளது என கூறி வருகின்றனர். மேலும் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே 2பாகம் உருவாவதற்கு தகுதி உள்ள படம் ரெமோ படம் தான் எனக் கூறி வருகின்றனர்.

மேலும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் படமும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ரெமோ படத்தின் 2பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியாகியுள்ளது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என கூறி வருகின்றனர். மேலும் இப்படத்தின் வெற்றியை வைத்து அடுத்தடுத்து எந்த மாதிரியான படம் நடிப்பார் என்பது தெரியும் எனவும் கூறி வருகின்றனர்.

சத்யராஜ் உடன் டான்ஸ் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா.. காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க

கவர்ச்சி நடிகைகள் மத்தியில் மிகவும் வித்தியாசமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. படப்பிடிப்பு முடிந்தவுடன் பத்து நிமிடங்கள் மட்டுமே காத்திருப்பாராம் பின்பு, ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கு இருந்து சென்றுவிடுவார். சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும் மிகவும் ...
AllEscort