ரெட் குர்தா, வேஷ்டியுடன் மாஸ் காட்டும் அஜித்.. ஷாலினியுடன் வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்

அல்டிமேட் ஸ்டார் அஜித், ஷாலினி இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். அப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன்பின் 2008 இல் அனோஷ்கா என்ற மகளும், 2014இல் ஆத்விக் என்ற மகனும் பிறந்தார்கள். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார். அஜித் பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா ப்ரமோஷன்களில் கலந்து கொள்வதில்லை. அஜித் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிடமாட்டார்.

இதனால் அஜித், ஷாலினி இருவரும் விமான நிலையங்களுக்கு வரும் போதும், ஷாப்பிங் செய்யும்போதும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். இவ்வாறு அவ்வப்போது வெளியாகும் அஜித்தின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருவார்கள்.

நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது தீபாவளி பண்டிகையை பல பிரபலங்கள் புத்தாடைகளுடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்கள். நேற்று எதிர்பாராத வகையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.

அதில் தல அஜித் சிகப்பு நிற குர்தாவும், வேஷ்டியும் அணிந்திருந்தார். அருகில் அவரது மனைவி ஷாலினி மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தார். வலிமை படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது தல அஜித் ஷாலினியுடன் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

தீபாவளி அன்று அஜித்தின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது அஜித்தின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாகி வருகிறார்கள்.