ருத்ர தாண்டவம் பார்த்த பின் மோகன்ஜி-க்கு வலை விரித்த மாஸ் நடிகர்.. அதிரடியாக உருவாகும் கூட்டணி

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன். ஜி. அதன் பிறகு இவரது இயக்கத்தில் வெளியான திரௌபதி படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார். கடைசியாக ருத்ர தாண்டவம் எனும் படத்தை இயக்கியிருந்தார்.

ருத்ரதாண்டவம் திரைப்படம் மதத்தை பற்றி எப்படி குறை கூறுகிறார்கள், எந்த அளவிற்கு மதமாற்றம் செய்ய முயற்சி படுகிறார்கள் என்பது குறித்து தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியது. மேலும் இப்படம் எதிர்பார்த்ததைவிட ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதன்பிறகு மோகன் இயக்கத்தில் அடுத்ததாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

தற்போது மோகனின் படங்களை பார்த்த சிம்பு அடுத்ததாக இவர் இயக்கும் படத்தில் நடிப்பார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. மேலும் சிம்பு கிராம கதையாக இருந்தால் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறியதால் தற்போது மோகன்ஜி சிம்புவிற்காக ஒரு கதை எழுதி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இவர்கள் இருவரும் இதைப் பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இணைவதாக தகவல் வெளியானதை அடுத்து தற்போது இவர்களது கூட்டணியில் படம் வெளியானால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போது சிம்பு அடுத்தடுத்து வித்தியாசமான கதை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் கூடிய விரைவில் மோகன்ஜி உடன் இணைந்து சிம்பு ஒரு படத்தில் நடிப்பார் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

ஜெட் வேகத்தில் போகும் நாகசைதன்யா.. ராக்கெட் போல் செயல்படும் சமந்தா

சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்து இருந்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது காலப்போக்கில் காதலாக மாறி இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ...
AllEscort