தமிழ் சினிமாவில் ரன் படத்தின் மூலம்அறிமுகமான மீரா ஜாஸ்மினுக்கு முதல் படமே பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மீரா ஜாஸ்மின் தேடி வந்தன.

அதனை சரியாக பயன்படுத்தி விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்ச நேயா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி படத்தில் கதாநாயகியாக நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

இப்படத்திற்கு பிறகு அனைத்து ரசிகர்களும் மீரா ஜாஸ்மின் மீது அதிக காதல் கொண்டிருந்தனர். அதன் காரணமாக இவருக்கு ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் இவர் ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே ஏற்று நடித்து வந்தார்.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமா விட்டு சிறிது காலங்கள் விலகினார். பின்பு தொழில்துறையில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

மீரா ஜாஸ்மின் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இப்புகைப்படத்தை பார்க்கும் போது உடல் எடை முழுவதும் குறைத்து தற்போது ஒல்லியாக உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீரா ஜாஸ்மின் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என கூறி வருகின்றனர்.