ரிலீஸானது என்னமோ பிட்டு வீடியோ தான்.. கல்லா கட்ட தயாரான வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மன்மத லீலை. இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிவண்ணன் கதை எழுதியுள்ளார். பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஒரு காட்சி சமீபத்தில் வெளியானது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு அதில் இடம் பெற்றிருந்த லிப் லாக் காட்சிகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மேலும் வெங்கட்பிரபு மாநாடு போன்ற ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து விட்டு, பிட்டு படம் ரேஞ்சுக்கு இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் படம் நிச்சயம் வரவேற்பு பெறாது என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த மன்மத லீலை திரைப்படத்தை வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருந்தது. அதனால்தான் இந்த படத்தில் லிப் லாக் காட்சிகள் முதற்கொண்டு ஏகப்பட்ட அடல்ட் கண்டன்ட் காட்சிகள் வைக்கப்பட்டது.

தற்போது இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு யோசித்து வருகிறது. இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு அவர்கள் எந்த தைரியத்தில் படத்தை திரையரங்கில் வெளியிட இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சென்சார் குழுவில் அதற்கு எப்படி அனுமதி கிடைக்கும்.

இந்நிலையில் படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தற்போது போட்டி போட்டு வருகின்றனர். ஏனென்றால் ஏற்கனவே இது போன்ற சாயலில் பல திரைப்படங்கள் வெளிவந்து வரவேற்பை பெற்றிருக்கிறது. எது எப்படியோ இதனால் வெங்கட் பிரபுவின் காட்டில் இனி அடை மழைதான்.