ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்கும் தளபதியின் பீஸ்ட் .. கொண்டாட்டத்தில் நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், ஜான் விஜய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதால் பட வெளியீட்டிற்காக விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

நெல்சனின் முந்தைய திரைப்படங்களை போலவே இந்த திரைப்படமும் ஒரு ப்ளாக் காமெடி ஆக்ஷன் த்ரில்லர் வகையை சேர்ந்தது தான். அதிலும் இந்த திரைப்படத்தில் தங்கை சென்டிமென்ட் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் உலக அளவில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. தற்போது இதன் வெளிநாட்டு உரிமை முப்பத்தி எட்டு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெளி நாட்டின் மிகப் பிரபல நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் பீஸ்ட் படஉரிமையை தற்போது கைப்பற்றியுள்ளது. ஒரு தமிழ் திரைப்படம் வெளி நாட்டில் இவ்வளவு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் சாதனை புரிந்து வருவதால் தான். அதுமட்டுமல்லாமல் பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனால் தான் அவருடைய திரைப்படத்திற்கு வெளிநாட்டிலும் மவுசு அதிகமாக இருக்கிறது.