ராதிகாவுடன் உச்சகட்ட ரொமான்ஸில் கோபி.. பாக்கியலட்சுமியில் அடுத்த டுவிஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் இல்லத்தரசியை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர்தான் பாக்கியலட்சுமி. இத்தொடர் குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது.

பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி பாக்யா அதிகம் படிக்காதவர். அவர் கணவன் கோபி நன்கு படித்து ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தந்தையின் வற்புறுத்தலால் விருப்பம் இன்றிப் கோபி, பாக்யாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு செழியன், எழில் என்ற மகனும் இனியா என்ற மகளும் உள்ளார்.

இந்நிலையில் கோபி கல்லூரி படிக்கும் பொழுது காதலித்த ராதிகாவை சந்திக்கிறார். ராதிகாவும் தன் கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்ய போகிறார். கோபியின் தந்தை உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் நிறைய பணம் செலவு ஆகிறது.

இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் எழுகிறது. செழியன், எழில் இருவரும் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை பெரிதாகிறது. இந்நிலையில் கோபி இந்த வீட்டில் இருக்க பிடிக்கவே இல்லை என பாக்கியா மீது கோபப்பட்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவின் மகள் மயூ கோபியை வற்புறுத்தி இரவு அங்கேயே தங்கவைக்கிறாள்.

இந்நிலையில் ராதிகாவின் வீட்டில் ராதிகா, கோபி, மயூ மூவரும் படுத்துள்ளனர். அப்போது மயூ தனக்கு கதை சொல்லுமாறு கோபியிடம் கேட்கிறாள். கோபியும் மயூவிற்கு கதை சொல்லி தூங்க வைக்கிறாள். அதன்பிறகு கோபி, ராதிகா ரொமான்ஸ் செய்கிறார்கள்.

கோபியின் குடும்பமே மிகப்பெரிய மனகஷ்டத்தில் உள்ள நிலையில் கோபி இங்கு வந்து ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். இந்த சண்டையை காரணமாக வைத்து நிரந்தரமாக குடும்பத்தைப் பிரிந்து ராதிகாவுடன் கோபி வர திட்டமும் வைத்திருப்பார். இதனால் பாக்கியலட்சுமியின் அடுத்த அடுத்த எபிசோடுகளில் பல திருப்பங்கள் வர காத்திருக்கிறது.