ராதிகாவிற்கு விமானத்தில் தொல்லை கொடுத்த நபர்.. இறங்கியபின் நடந்த சிறப்பான சம்பவம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். மேலும் சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு எனும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் ராதிகா டாப் நடிகைகளில் ஒருவர். அன்றைய காலகட்டத்தில் ராதிகாவை அடித்துக் கொள்ள ஆளில்லை. அந்த அளவிற்கு ஏராளமான படங்களை கைவரிசையில் வைத்திருந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு ராதிகாவிற்காகவே பல இயக்குனர்களும் பொறுத்திருந்து படங்களை இயக்கிய காலங்களும் உண்டு.

அதேபோல் எப்போதும் ராதிகா தைரியமான பெண்மணி எனவும், எதையுமே தைரியமாக வெளிப்படையாகவே தெரிவித்து விடுவார் என்ற கருத்தும் சினிமா வட்டாரத்தில் பல காலமாக இருந்து வருகிறது. தற்போது அதனை மனோபாலா உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது ஒரு படத்திற்காக ராதிகா மற்றும் மனோபாலா போன்ற நடிகர்கள் விமானத்தில் சென்று கொண்டிருந்த போது ராதிகாவிற்கு பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவர் ராதிகாவை கை, கால் என கண்ட இடங்களை பிடித்துள்ளார். ஆனால் அப்போது ராதிகா கடுமையான உறக்கத்தில் இருந்ததால் பொறுமை காத்ததாக தெரிவித்துள்ளார்.

பின்பு இன்னும் பத்து நிமிடத்தில் விமானம் தரையில் இறங்கி விடும். அதன் பிறகு அந்த நபரை பார்த்து கொள்ளலாம் என பொறுத்திருந்து. பின்பு இறங்கியபின் அந்த நபரை கூப்பிட்டு வெளுத்து விட்டாராம். அந்த சண்டையும் அத்தோடு முடிந்ததாக மனோபாலா தெரிவித்தார். மேலும் இது போன்று பல நடிகைகளுக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பூதாகரமாக வெடிக்கும் சித்ராவின் மரணம்.. அரசியல் புள்ளிகளால் திசைமாறும் தற்கொலை வழக்கு

கடந்த சில நாட்களாகவே மறைந்த விஜே சித்ரா குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் அவரின் கணவர் சித்ராவின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறியிருப்பது பலருக்கும் ...