நடிகர் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

இவர்கள் இருவரும் இணைய உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே வெளியானது. ஆனால் தற்போது தான் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் படத்தின் இயக்குனர் தானாம். திரைக்கதை எழுத மட்டும் இயக்குனர் ராம்குமார் ஓராண்டுக்கு மேல் எடுத்து கொண்டாராம்.

முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட படங்களை போலவே இந்த படமும் மாறுபட்ட கதைகளத்தில் அமைய உள்ளதாம். இது ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக உள்ளதால் தான் திரைக்கதை எழுத இவ்வளவு நேரம் எடுத்து கொண்டதாக இயக்குனர் ராம்குமார் கூறியுள்ளார். ஏற்கனவே 3 வருடங்களாக கதை தயார் செய்து அவரிடம் கூறிய பின் கதை பிடிக்கவில்லை என்று தனுஷ் கூறியதாக வெளிவந்தது புரளிதான் என்பது உறுதியாகிவிட்டது.

தற்போது ராம்குமார் திரைக்கதையை முழுவதும் எழுதி முடித்து விட்டு தனுஷிடம் சென்று கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட தனுஷ் ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு பாதியில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர இப்படத்திற்கு “வால் நட்சத்திரம்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த படம் முழுக்க முழுக்க கார்ட்டூன் படத்தை மையமாகக் கொண்டு கதையை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ராம்குமார் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.