ராஜுவின் சுயரூபத்தை இனிம தான் பார்க்க போறீங்க.. வெளியேறிய போட்டியாளரின் மனம் திறந்த பேட்டி

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் வாரவாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் நான்காம் வாரத்தில் வெளியேறிய பாடகி சின்னப்பொண்ணு முதல்முறையாக பிக்பாஸ் குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் மனம்திறந்து பேட்டி அளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் பேட்டியில் நீங்க அதிகமா நிகழ்ச்சியில் காட்டப்படவில்லையே என்ற கேள்விக்கு சின்ன பொண்ணு, நான் கூட்டணி அமைத்தது இல்லை, சண்டையில் போய் அதிகம் பங்கு எடுக்கவும் இல்லை அதனாலோ என்னமோ நான் கேமராவில் அதிகம் காட்டப்படவில்லை என்று சாமர்த்தியமாக பதில் அளித்தார்.

இவர் போட்டியாளர் அபிஷேக் பற்றியும் பல தகவல்களை கூறினார். அபிஷேக் எப்பொழுதும் குரூப்பாக தான் விளையாடுவான், குரூப்பாக அமர்ந்து தான் பேசுவான், அவனால் வீட்டில் பல சண்டைகள் வந்தது. அவன் வெளியேறியது நல்லதுதான் அவன் வீட்டில் இருந்தால் இன்னும் நிறைய சண்டைகள் தான் வரும் என்று மனதில் பட்டதை பட்டுனு உடைத்தார் சின்னப்பொண்ணு.

இதைத்தொடர்ந்து ராஜு நல்லவரா என்று கேட்ட கேள்விக்கு சின்னப்பொண்ணு நானும் அவரிடம் இதே கேள்வியை கேட்டிருக்கிறேன். நீங்க இவ்வளவு நல்லவரா பொறுமையா இருக்கீங்களே உங்களுக்கு கோபமே வராதா என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் எனக்கு கோபம் வரும் அப்ப நான் இப்படி இருக்க மாட்டேன் என்று அதிர வைத்தது போல் பதிலளித்தார் எனக் கூறினார். இனி ராஜுவின் உண்மை முகத்தை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சின்னப்பொண்ணு அக்கா, பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டிற்குள் இருந்து விளையாடுவதற்கும் வெளியே வந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என தன் மனக்கருத்தை வெளிப்படுத்தினார். மேலும் பிரியங்கா இவரை உடைமாற்றும் அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தது தனக்கு பிடிக்கவில்லை என்றும் வருத்தமுற்றார்.

பின்னர் அபிஷேக் போல நிரூப் மாறிகிட்டே வருகிறாரா என்ற கேள்விக்கு, ஆமாம் பொம்மையை காப்பாற்ற ஐக்கி இடம் பேசியதும் அக்ஷராவிடம் நடந்து கொண்டதும் இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது என்று சொல்கிறார்.

ஜெயிக்க முடியாமல் தடுமாறும் சூர்யா.. தொடர்ந்து இத்தனை தோல்வி படங்களா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சூர்யா. விஜய், அஜித்துக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்களை கொண்டவர் சூர்யா. ஆரம்பத்தில் இவரது படங்கள் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் தன்னுடைய கடின உழைப்பால் ஒரு நிலையான ...
AllEscort