ராஜா ராணி 2 வில்லி அர்ச்சனாவா இது.? ஆத்தா தயவுசெய்து சிரிக்காதீங்க என கலாய்த்த நெட்டிசன்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக சஞ்சீவி நடித்திருந்தார். பின்பு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முதல் சீரியல் ரசிகர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால் இதனை இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டனர்.

இதில் சஞ்சீவிற்கு பதிலாக திருமணம் சீரியல் மூலம் புகழ் அடைந்த சித்துவை ஆலியா மானசாவிற்கு ஜோடியாக நடிக்க வைத்தனர். இந்த சீரியலும் எதிர்பார்த்தபடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஆலியா மானசா விற்கு அடுத்தபடியாக ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் விஜே அர்ச்சனா.

இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு தான் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் இவர் பல தொலைக்காட்சிகளில் விஜே வாக பணியாற்றியுள்ளார். அப்போது இவருக்கு பற்கள் சீராக இல்லாததால் தொலைக்காட்சிகளில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதன்பிறகு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பற்கள் அனைத்தையும் சீராக அமைத்துள்ளார். அதன்பிறகுதான் இவருக்கு விஜே வாகவும் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் விஜே அர்ச்சனாவின் பற்கள் சீராக இல்லாமலிருக்கும் இவருடைய பழைய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஒரு சில ரசிகர்கள் இப்புகைப்படத்தை பார்த்து VJ அர்ச்சனா முதலில் இப்படித்தான் இருந்துள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் ஆரம்பத்தில் பல நடிகைகளும் சுமாராகத்தான் இருந்துள்ளனர். காலப்போக்கில் தான் அவர்கள் அனைவரும் அழகாக மாறினார்கள் அப்படித்தான் விஜே அர்ச்சனாவும் தற்போது அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆத்தா தயவுசெய்து சிரிக்காதீங்க என கலாய்த்து வருகின்றனர்.