ராஜா ராணியை பின்னுக்குத் தள்ளிய பிரபல சீரியல்.. தூள் கிளப்பும் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்

ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களில் அந்த வாரத்தில் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் அந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் பேசும் பொருளாக மாறும்.

அப்படித்தான் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில், கடந்த சில வாரங்களாக முதல் இடத்தைப் பிடித்திருந்த ராஜா ராணி2 சீரியலை பின்னுக்குத்தள்ளி பாரதிகண்ணம்மா மீண்டும் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்த வாரம் பாரதிகண்ணம்மா சீரியலில் லட்சுமியின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் தன்னுடைய அப்பா பாரதி தான் என்பதை அறிந்த லட்சுமி அவனிடம் எடுக்கும் உரிமையும் கண்ணம்மா-பாரதி இருவரையும் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியும் ரசிகர்களை ஈர்த்து விட்டது.

இதைத்தொடர்ந்து இல்லத்தரசிகள் படும்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் இரண்டாம் இடத்தையும், நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் கூட்டுக்குடும்ப மகத்துவத்தையும் வெளிப்படுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்றாம் இடத்தையும், ராஜாராணி2 நான்காம் இடத்தையும் பிடித்திருக்கிறது.

மேலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு ஐந்தாம் இடம் கிடைத்திருக்கிறது. ஆறாவது இடம் மௌனராகம்2 சீரியலுக்கும்,  7வது இடம் தொடங்கப்பட்ட சில நாட்களே ஆன ஈரமான ரோஜாவே2 சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது.

இந்த சீரியல் வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதை பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் ஈரமான ரோஜாவே2 சீரியல் ஆனது காற்றுக்கென்ன வேலி, வேலைக்காரன், தென்றல் வந்து என்னை தொடும், பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, முத்தழகு போன்ற சீரியல்களை பின்னுக்குத்தள்ளி அடுத்தடுத்த இடங்களை பெற வைத்துள்ளது.