ராஜமவுலி பார்த்து மிரண்டுபோன ஒரே தமிழ் இயக்குனர்.. அவர மாதிரி படம் எடுக்கிறது ரொம்ப கஷ்டம்!

இந்திய சினிமாவில் 20 ஆண்டுகளாக 7 வெவ்வேறு கதாநாயகர்களை வைத்து 12 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து திரைத்துறையில் தடம் பதித்து நிற்கும் நம்பர் ஒன் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி. இவருடைய முதல் படமான ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ திரைப்படம் வெறும் 2 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜமௌலியின் கைவண்ணத்தால் 10 கோடி வசூலை பெற்றுத் தந்தது.

அன்று முதல் சமீபத்தில் ரிலீசான ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வரை பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட திரை உலகின் ஜாம்பவானாக இருக்கும் ராஜமௌலி தமிழ் இயக்குனரான வெற்றிமாறனை பார்த்து மிரண்டு போய் உள்ளார்.

ஏனென்றால் தற்போது ராஜமவுலி அளித்த பேட்டியின்போது, ‘சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் என்னை கவர்ந்தது அசுரன். இதில் வெற்றிமாறனின் மேக்கிங் ஸ்டைல் வித்தியாசமாகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது. அத்துடன் அவரைப்போல படத்தை இயக்குவது கொஞ்சம் கஷ்டம் தான்’ என்று ராஜமௌலி வெற்றிமாறனை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற அசுரன் திரைப்படம் அந்த ஆண்டிற்கான 2 தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது சிறந்த தமிழ் படத்துக்கான விருதும், தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. அத்துடன் ராஜமவுலியே வியந்து பார்க்கும் அசுரன் திரைப்படத்தை எடுக்கும்போது வெற்றிமாறனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதால் படத்தை வெளியிடுவதற்கான தேதி மிக குறுகிய காலமாக இருந்திருக்கிறது.

ஆகையால் வெற்றிமாறனால் முழுமனதோடு நிறைவாக அசுரன் படத்திற்கான வேலையை செய்ய முடியவில்லை என்று அவர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இப்பவே அசுரன் படத்தை முன்னுதாரணமாக எடுத்து பேசப்படுகிறது.

ஒருவேளை வெற்றிமாறன் இன்னும் கூடுதலாக வெற்றிமாறன் அசுரன் படத்திற்கு முயற்சித்திருந்தால் படம் வேற லெவலுக்கு சென்றிருக்கும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் ராஜமவுலி தமிழ் இயக்குனரை குறித்த வியப்புடன் பேசியிருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் சினிமா ரசிகர்களால் ட்ரெண்ட்டாக்கப்பட்டு வருகிறது.