ராக்கெட்ரி ரிலீஸ் தேதியை வெளியிட்ட மாதவன்.. வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் மாதவன். இவருக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடித்து வந்த மாதவன் இடையே சற்று சறுக்கினார். பின்னர் தமிழில் இருந்து அப்படியே பாலிவுட் சினிமாவிற்கு சென்றார்.

பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்த மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து மாதவன் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விட்டார். தற்போது மாதவன் நடிப்பில் ராக்கெட்டரி என்ற படம் உருவாகி உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகை சிம்ரன் இப்படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்துள்ளார். ராக்கெட்டரி படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மாதவனே இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் மாதவனும் ஒருவராவார்.

இதுவரை நடிகராக மட்டும் இருந்த மாதவன் இப்படம் மூலம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த விட்டன. எனவே படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தான் ராக்கெட்டரி படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பழிவாங்க தயாராகும் மல்லி, சமாளிப்பாரா தனம் – பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது லக்ஷ்மி அம்மாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த திருப்பத்தை நோக்கி நகர்கிறது. லட்சுமி அம்மாவின் மறைவிலிருந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம். தற்போதைய ...
AllEscort