ரம்யா நம்பீசன் படம் நேரடியாக டிவியில் ரிலீஸ்.. போட்டி போட்டுக்கொண்டு வாங்கிய பிரபல சேனல்!

கொரோனா பாதிப்பினால் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே புதிய படங்களை வெளியிடும் முறையை மாற்றி, தற்போது ஓடிடியிலும் நேரடியாக தொலைக்காட்சிகளிலும் திரையிடப்படுகிறது.

அந்த வகையில் பிரபல தொலைக் காட்சிகள் அனைத்தும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்து, புது படங்களை தொலைக்காட்சிகளின் வாயிலாக ரிலீஸ் செய்கிறது. அண்மையில் சன் டிவியின் வாயிலாக விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’ நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதேபோல் விஜய் டிவியில் சமுத்திரக்கனியின் ‘ஏலே’, ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ மற்றும் யோகி பாபுவின் ‘மண்டேலா’ போன்ற படங்களும் ரிலீஸ் ஆனது. அதேபோன்று கலர்ஸ் தமிழில் ‘சர்பத்’ போன்ற ஒரு சில படங்களும் நேரடியாக வெளியிடப்பட்டது.

தற்போது இவர்களுக்கெல்லாம் போட்டியாக ஜீ தமிழில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் வெற்றி துரைசாமி இயக்கிய ‘என்றாவது ஒருநாள்’ என்ற படம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் உரிமையை கைப்பற்றி உள்ளது.

இந்தப்படத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘என்றாவது ஒருநாள்’ திரைப்படம் கால்நடை வளர்ப்பு பற்றிய முக்கியத்துவத்தையும், உலகமயமாக்கல் கொண்டுவந்த இடப்பெயர்ச்சி பற்றியும் விளக்குகிறது.

அத்துடன் சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்சனையான குழந்தைத் தொழிலாளிகள், தண்ணீர் பற்றாக்குறை, எதிர்காலத்தில் மக்களுக்கு சவாலாக இருப்பதைப் பற்றி பேசுவதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. எனவே இந்தப்படத்தை தொலைக்காட்சியில் காண்பதற்காக ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

ஹனிமூனுக்காக நாடு நாடாக சுற்றும் விக்கி, நயன்.. உறுதிசெய்த கலக்கல் புகைப்படம்

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்கு செல்ல ...