ரத்தக்களரியான பிக்பாஸ் அல்டிமேட் வீடு.. உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லையா

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் திருடன், போலீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த டாஸ்க்கில் தினமும் ஒரு சண்டையும், சச்சரவும் ஏற்படுகிறது.

இதில் சற்று முன்பு வெளியான ஒரு ப்ரோமோவில் விளையாட்டு மும்முரத்தில் அனிதாவுக்கு கையில் அடிபட்டு விடுகிறது. இதனால் கடுப்பான வனிதா வழக்கம்போல பிக்பாஸிடம் நேற்றிலிருந்து நான் சொல்லிட்டு இருக்கேன் இந்த கேமை நிப்பாட்டுங்க என்று அதிகாரமாக கூறுகிறார்.

பின்னர் அடிபட்ட அனிதாவிற்கு அனைவரும் சேர்ந்து முதலுதவி செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் யாரும் பார்க்காதபோது திருடியாக இருக்கும் ஸ்ருதி அங்கு இருக்கும் ஒரு வைரத்தை ஆட்டையை போட்டு கொண்டு ஓடுகிறார்.

இதனால் வனிதாவுக்கும், அபிநய்க்கும் வாக்குவாதம் முற்றுகிறது. ஒரு கட்டத்தில் வனிதா அபிநய் நீ ரொம்ப கோல்மால் செய்ற எப்படி விளையாடனும் என்று கத்துக்கோ என்று சொல்கிறார். இந்த வார்த்தையால் கோபமான அபிநய் நீங்க எனக்கு கிளாஸ் எடுக்காதீங்க என்று ஆவேசமாக கத்துகிறார்.

இது இப்படியிருக்க போலீசாக இருக்கும் சினேகன், ஸ்ருதி வைரத்தை திருடிக் கொண்டு போனதை கடுமையாக எதிர்க்கிறார். ஒருவருக்கு அடிபட்டு சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது இப்ப எதுக்கு வைரத்தை எடுக்கிறீர்கள் என்று கோபமாக கேட்கிறார்.

மேலும் கொஞ்சமாவது மனித தன்மையுடன் நடந்துக்கங்க, இந்த சமயத்தில் யார் இதை செய்தாலும் தப்பு தான் என்று சொல்கிறார். இதை ஷாரிக், தாமரை உள்ளிட்டோர் கலாய்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இதேபோன்று சுருதி கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் தாமரை வைத்திருந்த நாணயத்தை அவர் உடைமாற்றிக்கொண்டு இருக்கும் நேரமாக பார்த்து திருடி விடுவார்.

இதனால் அப்போது தாமரை உள்ளிட்ட பலருக்கும் வாக்குவாதங்களும், சண்டையும் ஏற்பட்டது. ஸ்ருதியின் அந்த செயலை பலரும் கண்டித்தனர் ஆனாலும் திருந்தாத ஸ்ருதி தற்போது மீண்டும் அதே தவறை செய்துள்ளார். ஆர்வக்கோளாறுடன் விளையாடிய இந்த டாஸ்க் தற்போது ரத்தக்களறி ஆக மாறியுள்ளது.