விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 ஒரு மாதத்தை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த நான்கு சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவு, காமெடி, அன்பு, காதல் என்று எல்லாம் கலந்து இருந்தது.

ஆனால் இந்த சீசனில் வெறும் சண்டை மட்டும் இருந்து வருகிறது. அதிலும் பெண் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அடிக்க கை ஓங்கும் அளவுக்கு சென்றனர். இதனால் பிக்பாஸ் வீடு மீன் மார்க்கெட் போல் மாறி வருகிறது. இதனால் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மிகவும் போர் அடிப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் புதிதாக காதல் ஒன்று முளைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள அக்ஷரா சக போட்டியாளரான வருணுடன் மட்டும் சற்று சகஜமாக பழகி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் அக்ஷரா வருணுடன் தன்னால் இயல்பாக பழக முடிகிறது என்று கூறினார். இவர்களை சற்று உற்று கவனித்தால் நட்பையும் தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். நேற்றைய எபிசோடில் கூட அக்ஷராவின் டிரஸ் நன்றாக இல்லை என்று வருண் கூறினார்.

இதற்காக அக்ஷரா, வருணோடு விளையாட்டாக சண்டையிட்டார். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே ஆடையை மாற்றி விட்டு வந்தார். இதைப்பார்த்த வருண் இந்த ட்ரெஸ் நல்லா இருக்கு என்று கூறினார். யாருடனும் அதிகம் பேசாத அக்ஷரா வருணுடன் சற்று உரிமையாகப் பேசி வருகிறார்.

இதைப் பார்க்கும் ரசிகர்கள் பிக் பாஸ் எபிசோட் இனி நல்லா போகும் போல என்று கமெண்ட் கூறுகின்றனர். பரபரப்பான சண்டைகளுக்கு மத்தியில் உருவான இந்த மெல்லிய காதல் நிகழ்ச்சியில் சற்று சுவாரஸ்யத்தைக் கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.