விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் லாபம். இப்படத்தில் சுருதிஹாசன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என நினைத்து தான் பல டிஸ்டிபுடர் படத்தை வாங்கி வெளியிட்டனர்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் பல கோடி நஷ்டங்களை சந்தித்துள்ளனர். அதனை சரி கட்டும் விதமாக விஜய்சேதுபதியை நேரில் சந்தித்து தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும்படி கேட்க முடிவு செய்துள்ளனர்.

இதேபோல்தான் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இப்படத்தை வெளியிட டிஸ்ட்ரிபியூட்டர்களும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நஷ்ட ஈடு தருகிறேன் என கூறினார். ஆனால் ரஜினிகாந்த் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை பின்பு டிஸ்ட்ரிபியூட்டர்கள் அனைவரும் அவர் வீட்டின் முன் நின்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

ஆனால் அப்போதும் ரஜினிகாந்த் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு எதிர்பார்த்த பணம் திருப்பிக் கொடுக்கவில்லை. இதேபோல் தற்போது விஜய் சேதுபதியும் லாபம் படத்தை வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு பணத்தை கொடுக்க மறுத்து வருகிறாராம். லாபம் படம் வெளியாகி பல நாட்கள் ஆகியும் தற்போது வரை டிஸ்ட்ரிபியூட்டர்கள் விஜய் சேதுபதி நேரில் சந்திப்பதற்கு முயற்சி செய்துதான் வருகின்றனர்.

ஆனால் விஜய் சேதுபதியை நேரில் சந்திக்க முடியவில்லை அதனால் லிங்கா பட நஷ்டத்திற்கு எப்படி டிஸ்ட்ரிபியூட்டர்கள் அனைவரும் வீட்டின் முன் போராட்டம் செய்தார்களோ அதே போல் விஜய் சேதுபதி வீட்டின் முன் லாபம் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்கள் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் விஜய் சேதுபதியின் நெருங்கிய சினிமா பிரபலங்கள் லாபம் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்கள் விஜய் சேதுபதியை பார்க்க வேண்டும் எனக் கூறிய விஷயம் தற்போதுவரை விஜய் சேதுபதிக்கு தெரியவில்லை தெரிந்திருந்தால் கண்டிப்பாக உதவி செய்வார் என கூறி வருகின்றனர்.