ரஜினி பேச்சுக்கே மரியாதை இல்லையா.. அடங்காத தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வளவோ ஐஸ்வர்யா மற்றும் தனுசை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில் எதுவுமே கைகூடிய பாடில்லை என மொத்த ரஜினி குடும்பமும் தலைமேல் கைவைத்து கவலையில் உள்ளதாம்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து பஞ்சாயத்து தான் இன்னமும் கோலிவுட் வட்டாரங்களில் ஆறாமல் சூடாக இருக்கிறது. தினமும் இவர்கள் குறித்த செய்தி ஒன்று வரவில்லை என்றாலும் ஆச்சரியம்தான். அப்படிப்பட்ட தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் ஐஸ்வர்யாவிடம் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை வீட்டிலேயே இருந்த சமாளிக்க வேண்டுமே தவிர விவாகரத்து ஒரு முடிவு இல்லை என எடுத்துச் சொல்லி மீண்டும் தனுஷுடன் சேர்த்து வைக்க ஐஸ்வர்யாவின் மனதை மொத்தமாக மாற்றி விட்டாராம். ஐஸ்வர்யாவும் சரி சேர்ந்து வாழ்கிறேன் என ஒப்புக் கொண்டாராம்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ரஜினி உடனடியாக தனுசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல தனுஷ் இனிமேல் உங்கள் மகளுடன் சேர்ந்து வாழும் எண்ணம் எனக்கு சுத்தமாக இல்லை எனவும் உங்கள் குடும்பமே எனக்கு நிறைய செய்து விட்டது எனவும் இலை மறை காயாக விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இது உரித்த மனம் நொந்துபோன ரஜினி இருந்தாலும் பரவாயில்லை இப்போது உங்களுக்கு இருக்கும் நல்ல பெயர் இதனால் கேட்டுவிடக்கூடாது எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனுஷ் முடியவே முடியாது என மறுத்து விட்டாராம்.

இது குறித்து ரஜினி தன்னுடைய நட்பு வட்டாரங்களில் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதனால் தனுஷ் ரஜினிக்கே அடங்க வில்லை என்ற ஒரு தவறான கருத்தை வெளியில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் தனுஷ் தனக்கு நடந்த கொடுமைகளை ரஜினியிடம் சொல்லி கண்ணீர் விடாத குறையாக தன்னை விட்டு விடுங்கள் எனக் கெஞ்சியதுதான் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரியுமா.