ரஜினி டயலாக்கை கேப்ஷனாக வைத்து போஸ் கொடுத்த சிம்பு.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. சர்ச்சைக்கு பெயர் போன சிம்பு தற்போது தான் பிரச்சனைகள் அனைத்தையும் முடித்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அதிக எடையுடன் வலம் வந்த சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக எடையை குறைத்தார். மீண்டும் பழைய சிம்புவை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். அதனால் தான் அப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஈஸ்வரன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

தற்போது சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போட்டோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் கடுமையாக உடற்பயிற்சி பள்ளி மாணவன் போன்று தோற்றமளித்தார் சிம்பு.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி உள்ள மாநாடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதே நாளில் தான் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சேரில் சாய்ந்தப்படி தலைக்கு பின்னால் கை வைத்து படுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள சிம்பு அதற்கு கேப்சனாக “எல்லாம் மாயை” என்ற ரஜினி டயலாக்கை வைத்துள்ளார். இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் தலைவருடன் போட்டி போட்டு விட்டு அவர் டயலாக்கையே யூஸ் பண்றீங்களா? என கேட்டு வருகின்றனர்.