ரஜினி கமல் வேண்டாம் என்று ஒதுக்கிய நடிகை.. பின் அவர்களின் ராசியான கதாநாயகியாக மாறிய கதை

தமிழ் சினிமாவில் இருமுனை துருவங்களாக இருக்கக் கூடியவர்கள் தான் ரஜினி மற்றும் கமல்.. இவர்களை விடுத்து தமிழ் சினிமாவின் சரித்திரத்தை எழுதி விட முடியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவை கட்டி ஆண்டு கொண்டு வருகின்றனர். இப்போது வரைக்கும் இவர்கள் இல்லாத சினிமாவை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

அப்படி ரஜினி, கமல் இருக்கையில் அவர்களின் ஆரம்பகால கட்டத்தில் அவர்கள் இருவருக்கும் ராசியான ஒரு நடிகை இருந்ததாகவும் அந்த நடிகை படத்தில் இருந்தால் தான் படம் ஹிட்டாகும் என்று அவர்கள் நம்பியதாகவும் சொல்லப்படுகிறது. யார் அந்த நடிகை என்றால் ரஜினி முதன் முதலாக ஹீரோவாக நடித்து அறிமுகமான படம் பைரவி. இந்தப் படத்தில் நடித்த நடிகை தான் ஸ்ரீபிரியா.

மேலும் இந்த படத்தில் வில்லனாக ஸ்ரீகாந்த் நடித்திருப்பார். முதலில் ரஜினி ஹீரோவாக இந்தப் படத்தில் அறிமுகமானபோது ஸ்ரீபிரியா எல்லாம் என்கூட நடிப்பார்களா என்று சந்தேகமாக நினைத்திருக்கிறார்.ஏனென்றால் ரஜினி அறிமுகமாகும் போது ஸ்ரீபிரியா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் வரிசையில் இருந்தவர் .

அதனால் அறிமுகமாகும் முதல் படத்திலேயே அவர் நடிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்குமா என்று ரஜினி தன்னைத்தானே சந்தேகித்துக்கொண்டார். இறுதியில் பைரவி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரீபிரியா அந்த படத்தை ஒப்புக் கொண்டு நடித்து நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார்.

அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ரஜினியின் ஹீரோவாக அறிமுக படமான பைரவி ஹிட்டுக்கு பிறகு தான் ரஜினிகாந்த் என்று ஒரு நடிகர் இருக்கிறார் என்பதே தமிழ் சினிமா உலகிற்கு தெரியவந்தது. இதனால் இந்த படம் ஹிட்டாகி விட்டது என்பதால் ஸ்ரீபிரியா நமக்கு ராசியான நடிகை என்று நினைத்துக்கொண்டு ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்க முயன்றார்.

அவர்கள் இணைந்து நடித்த தாய் மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம்,தனி காட்டுராஜா உள்ளிட்ட பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதேபோல இவருடைய நண்பரான கமல்ஹாசனும், ஸ்ரீபிரியா மிகவும் ராசியான நடிகை என்பதை நம்ப ஆரம்பித்தார். அவரும் பல படங்களில் ஸ்ரீபிரியாவோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இவர்கள் இணைந்து நடித்த வாழ்வே மாயம்,அவள் ஒரு தொடர் கதை, அவள் அப்படித்தான், நீயா , இளமை ஊஞ்சல் ஆடுகிறது, சட்டம் என் கையில், சிம்லா போன்ற பல படங்களில் இருவரும் இணைந்து நடித்து இந்த படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஸ்ரீபிரியா பல படங்களில், இதே போல ரஜினி மற்றும் கமல் உடன் இணைந்து நடித்து, ஸ்ரீபிரியா அந்த காலத்தில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும், ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் பிஸியான நடிகையாகவும் வலம் வந்தார்.