ரஜினி, அஜித் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்.. பொறாமையில் பொங்கும் ஹேட்டர்ஸ்

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவான பின்னர் முதன்முறையாக இரண்டு பெரும் நடிகர்களோடு இணைந்து நடிக்கவுள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களான மாதவன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித்தின் திரைப்படங்களில் இணைந்து நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதற்கான அப்டேட் ரிசன்டாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பனான சிவகார்த்திகேயன் அஜித்துடன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நடிகர் அஜித்துடன் 2009ஆம் ஆண்டில் வெளியான ஏகன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் மீண்டும் தலயோடு நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கவுள்ளார். அதேபோல நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் வெற்றியை கொடுத்தது.

அதுமட்டுமில்லாமல் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திலும் ஹலமதி ஹபீபு என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றே .

அதனால் நெல்சன் திலீப் குமாரின் தலைவர் 169 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோடு சிவகார்த்திகேயனை வைத்து நடிக்க வைப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முக்கிய கதாபாத்திரம் எனவும் கூறப்படுகிறது. சில நிமிடத்திற்கு மட்டுமே வருவார் என்றும் ஆனால் அது முக்கியமான கதாபாத்திரமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகன் ரஜினிகாந்தின் மகளாக நடிக்க உள்ளார். பிரியங்கா மோகன் ஏற்கனவே டாக்டர், டான் போன்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். எனவே இத்திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடி சேருவார் என்ற கதை களம் அமையும் என்று கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.