தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புது படங்களின் வரவு அதிகரித்துள்ளது. அந்தவகையில், ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பகவான் திரைப்படம் தீபாவளி ரேஸில் இறங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு டைட்டிலை வென்றது மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதையும் வென்றவர் நடிகர் ஆரி. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு டி.வி.சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஆடும் கூத்து’ என்ற படத்தின்மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன்பின் ரெட்டைச்சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா என பல படங்களில் ஹீரோவாக நடித்தார். கடைசியாக இவர் நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படம் வெளியானது. அதன்பின் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாததால் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை வென்றவர், பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். தற்போது இவர் எல்லாம் மேல இருக்கவன் பாத்துப்பான், அலேக்கா, பகவான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். காளிங்கன் இயக்கத்தில் மித்தாலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை மஞ்சுநாதா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே வெளியானது. சமீபத்தில் இதன் பாடல் காட்சி மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடித்துள்ளார். இதனால் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் நாயகியாக ரங்கஸ்தலம் படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பை விரைந்து முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

ஏற்கனவே தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பகவான் படமும் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.