ரஜினியை விட்டுவிட்டு தளபதியை டார்கெட் செய்த வலிமை.. அதிரடி காட்டிய போனி கபூர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது அண்ணாத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால் அதிகமான திரையரங்குகள் கிடைக்கும், வசூலையும் வாரிக் குவித்து விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் ஆடியோ லான்ச் கூடிய விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மேலும் தீபாவளி அன்று வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஜித் குமார் நடிக்கும் வலிமை படம் முதலில் தீபாவளி அன்று தான் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். அதற்கு பலரும் அண்ணாத்த படம் வெளியாவதால் வலிமை படம் தள்ளிப்போனதாக கூறினார்.

ஆனால் காரணம் அது இல்லை அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் சென்றுள்ளது. ஆனால் வலிமை படத்தின் சிஜி காட்சிகள் தற்போது வரை எடுக்கப்பட்டு வருவதாகவும். மேலும் படத்தில் ஒரு சில காட்சிகள் எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தீபாவளி அன்று படத்தை வெளியிடுவதாக இருந்தால் வலிமை படத்தின் சிஜி காட்சிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும். மேலும் சிஜி காட்சிகள் மற்றும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் உட்பட அனைத்திலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பதால்தான் வலிமை படத்தை பொங்கலுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதனை படைத்த கர்ணன் திரைப்படம்.. பல நாடுகளில் பரவும் தனுஷ் புகழ்

நடிகர் தனுஷின் 41 வது படமாக உருவானது கர்ணன் திரைப்படம். தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அவருடைய திரை வாழ்வில் கர்ணன் திரைப்படம் ஒரு முக்கிய திரைப்படமாகும். தனுஷ் நடித்த புதுப்பேட்டை ...