ரஜினியை வச்சு செஞ்சு விட்ட விஜய், அஜித்.. தலைவரே அவர மட்டும் நம்பாதீங்க

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற அடையாளத்தை அழிக்க அஜித், விஜய் இருவரும் சேர்ந்து பல வியூகங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக ரஜினி பல தோல்வி படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

புது இயக்குனர்களை சினிமாவுக்கு கொண்டு வந்து அவர்களின் மூலம் வெற்றி பெறுவது போல் வெற்றி பெற்று அந்த இயக்குனரை ரஜினியிடம் அனுப்பி ரஜினிக்கு தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தல தளபதிக்கு வெற்றிப்படங்களை கொடுத்த அதே ஏஆர் முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தினை இயக்கி படுதோல்வி படத்தை இயக்கி கொடுத்தார்.

அதேபோன்று வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற தல அஜித்தின் சூப்பர் ஹிட் மாஸ் படத்தை கொடுத்த சிறுத்தை சிவா அதன் பிறகு கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் ரஜினிக்கு பெரும் சரிவை பெற்றுத்தந்தது.

அதற்கு முன்னரும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினி அவர்களது பேட்ட என்ற தோல்வி படத்தை கொடுத்துள்ளார். இவ்வாறு புது இயக்குனர்களை நம்பி மோசம் போன சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னுடைய 169-வது படத்தை வளரும் இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இடம் மீண்டும் நம்பி ஒப்படைத்திருக்கிறார்.

தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்தாலும் கலவையான விமர்சனத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் அடுத்தப் படத்திலாவது ரஜினியை வைத்து எப்படி படம் எடுக்க போகிறார் என்று ரசிகர்கள் பேரார்வத்தில் காத்திருக்கின்றனர்.

ஆகையால் அந்த படத்தையாவது சொதப்பாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் மட்டுமே, நெல்சனுக்கு இனி வரும் நாட்களில் பெரிய பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் அமையும்.

அப்படி இல்லை என்றால் அவர் இயக்குனராக இருந்த தடயமே தெரியாமல் மறைந்து விடுவார். எனவே இந்த இக்கட்டான சூழ்நிலை நெல்சனுக்கு மட்டுமல்ல தொடர்ந்து தோல்வி படத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் ரஜினிக்கும் இந்தப் படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.