ரஜினியை பின்னுக்கு தள்ளிய சூர்யா.. சூப்பர் ஸ்டார் மவுசுக்கு என்ன ஆச்சு?

அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு உண்மையாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மவுசு குறைந்து விட்டதா என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழத் தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் சமீபத்தில் வந்த அண்ணாத்த படத்தின் டீசர் தான்.

சிறுத்தை சிவா மற்றும் ரஜினி கூட்டணியில் முதன்முறையாக உருவாகி தீபாவளி ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த படத்தின் டீசரை சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

டீசர் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை யூடியூபில் சுமார் 8.3 M பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் போன்றவை கூட ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஆகவே கணிக்கப்பட்டது.

ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான சூர்யாவின் ஜெய்பீம் என்ற படத்தின் டீசர் சுமார் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது. இத்தனைக்கும் ஜெய் பீம் படத்தின் டிரைலர் அண்ணாத்த படத்தின் டிரைலர் அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் இணையதள வரவேற்பு குறைவாக இருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது ரஜினியின் டீசரை சூர்யாவின் டீசர் பார்வையாளர்கள் அதிகமாக இருப்பது ரஜினி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருந்தாலும் சமூகவலைதள பலத்தை விட ரஜினியின் தியேட்டர் வசூலை முறியடிக்க இன்னும் எவனும் திறக்கவில்லை எனும் அளவுக்கு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.