ரஜினியை தூக்கி வைத்து கொண்டாடும் இஸ்லாமியர்கள்.. வெளிவந்த உண்மையான பின்னணி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவரை சூப்பர் ஸ்டார் என்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் இவரும் மக்களுக்காக வெளியில் தெரியாமல் நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய சொத்துக்களை தானம், தர்மம் செய்வது போன்ற பல விஷயங்களையும் செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தை ரசிகர்களுக்காக கொடுத்து உதவியிருக்கிறார். இன்னும் இதுபோன்ற பல நல்ல விஷயங்களை அவர் செய்துகொண்டுதான் இருக்கிறார்.

இப்படிப்பட்டவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருடைய கோடானகோடி ரசிகர்கள் பெரிதும் ஆசைப்பட்டனர். ஆனால் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ரஜினி அரசியலுக்கு வருவதை பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். இருப்பினும் அவருடைய ரசிகர்களுக்காக அவர் அரசியலுக்கு வருவேன் என்று கூறினார்.

அந்த சமயத்தில் இவரை பிஜேபியின் ஆதரவாளர் என்றும் இவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக பிஜேபிக்கு ஆதரவாகத் தான் நடப்பார் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் ரஜினி எனக்கு அரசியல் வேண்டாம் என்றும் இனிமேல் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் தெளிவாக அறிவித்தார்.

இது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தாலும் ரஜினியின் அந்த முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இப்படிப்பட்ட ரஜினியை இன்றுவரை இஸ்லாமிய சமூகத்தினர் கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஒரு வலுவான காரணமும் சொல்லப்படுகிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் தீவிரவாதம் சம்பந்தப்பட்ட படம் எடுக்கப்படும்போது அதில் தீவிரவாதிகளாக பெரும்பாலும் முஸ்லிம்களே இருப்பார்கள். குறிப்பாக விஜயகாந்த், அர்ஜுன் போன்றவர்கள் அவர்களின் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தான் தீவிரவாதிகள் போல் காட்டியிருப்பார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் இதுவரை இஸ்லாமியர்களுக்கு எதிராக அப்படிப்பட்ட படங்களில் நடித்தது கிடையாது. அவர்களுக்கு எதிரான கதையைக் கூட அவர் தேர்வு செய்ய மாட்டார். இதனால் தான் அவரை இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.