சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு காலத்தில் வில்லன் கதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் மட்டும் தான் நடித்து வந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். பின்பு தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுக்க அதன் பிறகுதான் இவர் முழுநேர கதாநாயகனாக மாறினார்.

மேலும் இயக்குனர் மகேந்திரன் தயாரிப்பாளர் வேணு செட்டியார் மற்றும் மோகனிடம் முள்ளும் மலரும் படத்தின் கதையை பற்றி கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்ட தயாரிப்பாளர் கண்டிப்பாக இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் யார் கதாநாயகன் என கேட்டதற்கு மகேந்திரன், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கலாம் என கூறியுள்ளார்.

அதற்கு தயாரிப்பாளரும் மகேந்திரனிடம் உங்கள் நண்பன் என்பதால் இப்படத்தை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யாதீர்கள். அண்ணன், தங்கை  உறவுக்கான கதாபாத்திரத்தில் எப்படி ரஜினிகாந்த் நடிப்பார். இதுவரை இந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடித்ததில்லை என கூறியுள்ளார். ஆனால் மகேந்திரன் ரஜினிகாந்த் வைத்துதான் படம் பண்ணுவேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பின்பு வேறு வழியின்றி சம்மதித்த தயாரிப்பாளர் படம் வெளிவந்த பிறகு படத்தின் வெற்றியை பார்த்து மகேந்திரனை பாராட்டியுள்ளார். மேலும் இப்படம் தான் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டார்.