ரஜினியை ஏற்கனவே இயக்கி இருக்கும் நெல்சன்.. என்னையா சொல்றிங்க.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் அனிருத் இசையமைக்க ரஜினிகாந்தின் 169 ஆவது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகப் போகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு வீடியோ மூலமாக வெளியானது. என்னா ஸ்டைலு, என்னா மாஸ், எவண்டா சொன்னது தலைவருக்கு எழுபது வயசாச்சுனு என்று அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை படுவேகத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்திய அளவில் பல பிரபலங்களும் படக்குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது. வசூல் ரீதியாக அண்ணாத்த படம் வெற்றிப்படமாக பார்க்கப்பட்டாலும் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தாத ஒரு தோல்வி படமாக தான் அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப் படமாக இருக்க வேண்டுமென்று ரஜினி ரசிகர்கள் நம்பினார்கள். அதற்காக ரஜினியும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

அந்த வரிசையில் இருந்தவர்தான் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா டாக்டர் போன்ற காமெடி திரைப்படங்களை சுவாரசியமாக நகர்த்திச் சென்று கலெக்க்ஷன் அள்ளிய நெல்சன் திலீப்குமாரின் கதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிடித்துப்போகவே தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாவது போல சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான தலைவர் 169 படமும் சன் பிக்சர்ஸின் வசம் சென்று விட்டது.

ஆனால் இதற்கிடையில் நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்கி இருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா..? ஆமாம் நெல்சன் திலீப்குமர் இதற்கு முன்பு விஜய் டிவியில் நிகழ்ச்சி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த சமயத்தில் பல விருது வழங்கும் விழாக்களையும் இவர் இயக்கி கொடுத்திருக்கிறார். அப்படி மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஒரு விருது வழங்கும் விழாவை நெல்சன் இயக்கியும் இருக்கிறார். அதில் ஒரே மேடையில் ரஜினிகாந்த் ,தளபதி விஜய், சிவகார்த்திகேயன் என்று மூன்று பேரும் இருக்கும்படி செய்து, விழாவில் அதை அரங்கேற்றியும் காட்டி இருப்பார்.

என்ன நினைத்து அதை செய்தாரோ தெரியவில்லை அந்த மூன்று ஹீரோக்களையும் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து இருக்கிறது. அதிலும் சூப்பர்ஸ்டாரை நெல்சன் இயக்குவது எவரும் எதிர்பாராத ஒன்று அவரது நண்பர்கள் ட்விட்டர் தளத்தில் நெல்சன் திலீப்குமாருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெருமையுடன் தெரிவிப்பதாக கூறிவருகின்றனர்.

சும்மாவே ஆடுவோம் சலங்கைய வேற கட்டிவிட்டுட்ட இனி சும்மாவா இருப்போம் என்பது போல ரஜினி ரசிகர்கள் இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்ததும் உற்சாகத்தில் திளைத்துக் போயிருக்கின்றனர். இதை தீ வேகத்தில் பரப்பில் ரஜினிகாந்தின் மாஸ் குறையவில்லை என நிரூபித்து வருகின்றனர். டுவிட்டரில் டிரெண்டிங்கில் #Thalaivar_169 டிரெண்டிங் நம்பர் 1 ஆக இருக்கிறது. நெல்சன் திலீப்குமார் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை நெல்சன் திலீப்குமார் எப்படி பயன்படுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.