ரஜினியை அண்ணாந்து பார்க்க வைத்த தனுஷ்.. கொடுத்து வைக்காத மகளை நினைத்து வாடும் சூப்பர் ஸ்டார்

தனுஷ் தற்போது அனைத்து மொழி படங்களிலும் படு பிசியாக உள்ளார். சமீபத்தில் ஹாலிவுட்டில் தனுஷ் நடிப்பில் தி கிரே மேன் படம் வெளியாகி இருந்தது. தமிழில் தற்போது இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்திற்கு முன்பு இருவரும் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்தனர். சமீபத்தில் இருவரும் கூட அந்த அப்பார்ட்மெண்ட் அடிக்கடி சென்று வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இவர்கள் ஒன்றாக இருக்கும்போது போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்டுவதற்காக இடம் வாங்கி இருந்தார். போயஸ் கார்டனில் சினிமாவின் முக்கிய பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழில்துறையில் பெரிய அந்தஸ்து படைத்தவர்கள் குடியிருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடும் போயஸ் கார்டனில் தான் உள்ளது.

இந்நிலையில் தனுஷ் தற்போது போயஸ்கார்டனில் 170 கோடிக்கு வீடு கட்டி வருகிறாராம். இந்த வீட்டிற்கு கிட்டதட்ட 90 சதவீத வேலைகள் முடிந்து விட்டதாம். சமீபத்தில் கூட தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு தனுஷ் தனது புதிய வீட்டில் விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் தனுஷின் மகன்கள் மற்றும் செல்வராகவன் குடும்பம் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த வீட்டின் பரப்பளவு மட்டும் ஒரு லட்சம் ஸ்கொயர் பீட் என கூறப்படுகிறது. மேலும் தனுஷின் இந்த புதிய வீட்டில் பல சிறப்பம்சங்கள் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு அவரது மருமகன் தனுஷ் வீடு கட்டி இருந்தாலும் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு இவ்வீட்டில் வாழக் கொடுத்து வைக்கவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

தெறிக்க விட்ட ஹரி, அருண் விஜய் கூட்டணி.. யானை படத்தின் மொத்த வசூல்

ஹரி இயக்கத்தில் சமீபத்தில் யானை திரைப்படம் வெளியானது. அருண் விஜய், யோகி பாபு, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ...