ரஜினியை அசிங்கப்படுத்தினாரா ஜெயலலிதா.? ஊடகத்தில் விவாதமாக மாறிய சர்ச்சை

ரஜினிகாந்த் இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரது ஆரம்ப கால கட்டத்தில் வில்லனாக அறிமுகமாகி அதன் பின்தான் மெல்ல மெல்ல ஹீரோ அந்தஸ்தை பெற்று தற்போது சூப்பர் ஸ்டாராக மாறி இருக்கிறார். அப்படி அந்த காலத்தில் ரஜினி ஹீரோவாக மாறும் போது அவரைப் பார்த்து பயந்து இவருடன் யார் நடிப்பது என்று வெறுத்து ஒதுக்கிய ஹீரோயின்கள் தான் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால் இன்று சூப்பர் ஸ்டாரோட ஒரு சீனில் நடித்தால் கூட போதும் என்று ஹீரோயின்கள் நினைக்கையில் அந்த காலத்தில் அவரைப் பார்த்து பயந்து இவருடன் எப்படி நடிப்பது என்று ஓடிய ஹீரோயின்கள் தான் அதிகம்.

இப்படி இருக்கையில் ரஜினி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் என்றால் அது பில்லா திரைப்படம் தான். இந்த படத்தில் முதலில் ஸ்ரீபிரியா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா..? தமிழ் சினிமாவுலகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் கோலோச்சி முன்னாள் முதலமைச்சர் ஆக இருந்து மறைந்த ஜெயலலிதா அவர்கள் தான். அப்போது அவர்கள் மிகுந்த பிஸியான முன்னணி நடிகைகள் வரிசையில் இருந்தார்.

ஜெயலலிதாவை அந்தப் படத்தில் நடிப்பதற்காக கேட்டபோது, அவர் ரஜினியுடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். ஒரு நடிகை ரஜினியோடு நடிக்க விருப்பமில்லை என்று கூறியது அன்றைய நாளில் பத்திரிக்கை ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இது குறித்து பல பத்திரிகை செய்திகள் ரஜினிக்கு முரணாக வெளியாகியிருந்தது.

விவாதங்கள் அமைத்து இதற்கு காரணம் கண்டிப்பாக ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்த்துக்கும் இருக்கக்கூடிய பனிப்போர்தான் காரணம். அதனால் தான் வேண்டுமென்றே ரஜினிகாந்த்தை அசிங்கப்படுத்துவதற்காக ஜெயலலிதா செய்து இருக்கிறார் என்று பத்திரிக்கை செய்திகள் வெளியாகின.

அந்த சமயத்தில் ஜெயலலிதா மற்றும் ரஜினிக்கும் இடையே பல விஷயங்கள் முட்டிக் கொண்டது உண்மைதான். ஆனால் இதற்கு அது காரணமல்ல என்பது போல ஜெயலலிதா இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து ஒரு கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.

உண்மையில் தான் அப்போது சினிமாவை விட்டு விலகப் போவதாகவும், சினிமாவில் நான் சம்பாதித்த பணமே எனக்குப் போதும் என்றும், அரசியலில் ஈடுபடப் போகும் நான் இனி பொதுவாழ்வில் தீவிரமாக இறங்க இருப்பதால் சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலுக்கு செல்ல இருப்பதாகவும் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார். ஆனால் அது அதன் பிறகுதான் வெளியானது. அதற்குள் ஜெயலலிதா வேண்டுமென்றே ரஜினியை பழிவாங்குவதற்காக இப்படி செய்தார் என்று ஊடகங்கள் இந்த செய்தியை பெரிதாக்கி விட்டன.