ரஜினியின் வீட்டில் சங்கடத்திற்கு ஆளான கிரேஸி மோகன்.. நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!

பொதுவாக சூப்பர் ஸ்டார் ஒரு திரைப்படம் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கான கதை பற்றிய டிஸ்கஷன்களை எப்போதும் தன்னுடைய வீட்டில் தான் வைத்துக்கொள்வார். அப்படி ஒரு திரைப்படத்திற்காக டிஸ்கஷன் செய்யும் போது அவரது வீட்டில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

அது என்னவென்றால் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் அருணாச்சலம். அந்தத் திரைப்படத்திற்கு கதை மற்றும் வசனங்கள் எழுதியவர் பிரபல நடிகரும், தன்னுடைய காமெடி வசனத்தால் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடித்தவருமான கிரேசி மோகன் தான்.

இந்த படத்திற்கான கதை விவாதத்திற்காக சுந்தர் சி மற்றும் படக்குழுவினர் அனைவரும் ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த கிரேசி மோகன் பெரும் சங்கடத்துக்கு ஆளாகியுள்ளார்.

அதாவது அவருக்கு எப்போதுமே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். பல வருடங்களாக இந்தப் பழக்கத்தை வைத்திருக்கும் கிரேஸி மோகன் ரஜினியின் வீட்டில் வெற்றிலை பாக்கு போட்டால் எங்கே துப்புவது என்று யோசித்து போட்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால் வெற்றிலை பாக்கு போடாமல் அவருக்கு ரொம்பவும் அசௌகரியமாக இருந்துள்ளது. இதை கவனித்த ரஜினி அவரை வெற்றிலை போட சொல்லி கூறியுள்ளார். மேலும் அவர் வெற்றிலை போட்டு துப்புவதற்கு ஒரு தனி இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

தனக்காக ரஜினி இப்படி ஒரு ஏற்பாடு செய்தது கிரேசி மோகனுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகே அவரால் சற்று சகஜமாக அந்த கதை விவாதத்தில் பங்கேற்க முடிந்துள்ளது.