ரஜினியின் மாஸ் படத்தை நாசப்படுத்திய ஹீரோ.. ஒரு நியாயம் வேண்டாமா ஜி

சமீபகாலமாக சினிமாவில் ஒரு திரைப்படம் தாறுமாறாக ஹிட் அடித்து விட்டால் அந்த திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில் சிலர் அந்த திரைப்படங்களை நாசமாக்கியதும் உண்டு.

அந்த வகையில் தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த சில நடிகர்களின் திரைப்படங்களை மற்ற மொழிகளில் மோசமாக எடுத்துவிடுவார்கள். அப்படி நாசமான படங்களின் எண்ணிக்கையை கணக்கு எடுத்தால் அது நீண்டு கொண்டே போகும்.

அப்படித்தான் தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான பாட்ஷா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ரஜினி நடிப்பில் வெளியான இந்த பாட்ஷா திரைப்படம் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படமாகும்.

அப்படிப்பட்ட இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்கள் என்றதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது. சூப்பர்ஸ்டார் அளவுக்கு யாரால் அந்த கேரக்டரை பின்னி பெடல் எடுக்க முடியும் என்ற ஆர்வம்தான் அது.

அந்த வகையில் பாட்ஷா திரைப்படம் ஹிந்தியில் பிக் பிரதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ரஜினி நடித்த அந்த கேரக்டரில் இந்தி நடிகை சன்னி தியோல் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார்.

தமிழ் சினிமா வரலாற்றில் இன்றும் ஒரு பொக்கிஷ திரைப்படமாக இருக்கும் பாட்ஷா ஹிந்தியில் படுமோசமாக தோல்வி அடைந்தது. அந்தப் படத்தில் சன்னி தியோல் ரிக்ஷா ஓட்டுபவராக நடித்திருப்பார். மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

ஒரு நல்ல படத்தை சொதப்பி விட்டீர்கள் என்று அப்போது பல பத்திரிகைகள் விமர்சனம் செய்தது. இந்தப் படம் ரஜினியின் பெயரை மட்டும் அல்லாமல் அந்த படத்தின் பெயரையும் கெடுத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.