ரஜினியிடமே மூஞ்சியை காட்டிய நெல்சன்.. இருந்தாலும் மனுஷனுக்கு ரொம்ப தைரியம் தான்

இயக்குனர் நெல்சன் யார் என்று தெரியாத நிலையில் இருந்தார். ஆனால் இப்பொழுது அவர் தெரியாத ஆட்களை இல்லை என்ற அளவிற்கு வளர்ந்து விட்டார். அதற்குக் காரணம் அவரது திறமையும் அவரது எதார்த்தமான பேச்சு எதார்த்தமான அவரது படைப்புகளும் இளைஞர்களிடம் அதிகம் கவனத்தை ஈர்த்தது.

நெல்சன் டாக்டர் படத்திற்குப் பிறகு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வேகமாக வளர்ந்தார். அடுத்ததாக விஜய் சன் பிக்சர்ஸ் இணைந்து பீஸ்ட் படத்தை உருவாக்கினார்கள். மிகுந்த எதிர்பார்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து படம் வெளியானது. பல கலவையான விமர்சனங்களை பெற்று நெல்சன் கெட்ட பெயர் வருமளவிற்கு படம் அமைந்துவிட்டது.

விஜய் படம் இயக்கும் பொழுது ரஜினியிடம் சேர்ந்து படம் ஆரம்பித்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது பின்னர் விஜய் படம் சரியாக போகாததால் நெல்சன்க்கு பிரச்சனைகள் உருவானது. பீஸ்ட் படத்தை ரஜினி பார்த்துவிட்டு சொல்ல வார்த்தைகள் இன்றி சென்றுவிட்டார். பின்னர் இவர்கள் கூட்டணியில் விரிசல் ஆரம்பித்தது. தயாரிப்பு நிறுவனம் ரஜினியிடம் இயக்குனர் வேண்டாம் என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டது.

சன் பிக்சர்ஸ் ரஜினியிடம் நாங்கள் 2 இயக்குனர்களை தருகிறோம் பிடித்தால் அவரை வைத்து படம் பண்ணலாம் என்று சொல்லிவிட இந்த விஷயம் தெரிய வர நெல்சன் வருத்தமடைந்தார். ஒருகட்டத்தில் நெல்சன் ரஜினியிடமும், தயாரிப்பு நிறுவனம் இடமும் நீங்க யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கறதுக்கு எனக்குத் தேவையில்லை.

நான் சினிமாவிற்கு சாதிக்க வரவில்லை சம்பாதிக்க தான் வந்தேன். நான் நினைத்ததை விட அதிக சம்பாதித்து விட்டேன் இதற்கு அப்புறம் வரும் பணம் வெற்றி அனைத்தும் எனக்கு லாபமே. என் திறமையை முழுவதும் வைத்து முதல் படம் வெற்றி கொடுத்தேன் அதற்கு அடுத்த படங்கள் அனைத்தும் அதிர்ஷ்டத்தின் மூலம் வெற்றி அடைந்தது. என்னோட படம் பண்ண விருப்பம் இருந்தால் பண்ணுங்கள் இல்லையென்றால் நீங்கள் யாரை வைத்து படம் எடுங்க எனக்கு கவலை இல்லை என்று பயமில்லாமல் கெத்தாக சொல்லிவிட்டார்.

ரஜினி பயந்து அசிங்கமாகிவிடும் என்று நெனச்சு படம் பண்ணலாம் என்று கூறிவிட்டார். இதைக் கூறிவிட்டு வட்டாரத்தில் எந்த இயக்குனரும் இது மாதிரி ரஜினியிடம் பேசியதில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். நெல்சனின் தைரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.