ரஜினியால் பாதிக்கப்பட்ட அண்ணாத்த.. கலங்கிய கலாநிதிமாறன்

கடந்த இரண்டு தினங்களாகவே அனைத்து சோசியல் மீடியாவிலும் பேசப்பட்ட செய்தி என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான். திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு ரஜினியின் தீவிர ரசிகர்கள் தீச்சட்டி எடுத்தல், மண் சோறு உண்ணுதல் உள்ளிட்ட பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்று தான் கூற கூற வேண்டும். ஆம் நடிகர் ரஜினிகாந்த் எந்தவித பிரச்சனையும் இன்றி பூரண குணத்துடன் நேற்று இரவு வீடு திரும்பி விட்டார். இந்த செய்தியை கேட்ட பின்னரே ரஜினி ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

இதுதவிர இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

முன்னதாக படம் வெளியாவதற்கு முன்பு படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நடிகர் ரஜினி பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்க படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக நடிகர் ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அந்த திட்டம் கைவிடப்பட்டு விட்டதாம். இதில் எதுவுமே நடக்காததால் கலாநிதி மாறன் சற்று வருத்தத்தில் உள்ளாராம்.

ரஜினி படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் எல்லாம் தேவை இல்லை. ரஜினி என்ற ஒற்றை பெயர் போதும். இருந்தாலும் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் அவர் குணமடைந்து நலத்துடன் வீடு திரும்பியதே போதும் என அவர்களின் நிம்மதியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

விஷாலுக்கு வில்லனாக நடிக்க சம்பளத்தை உயர்த்தி SJ சூர்யா.. 108 கோடி வசூல் நா சும்மாவா

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் மாநாடு. இப்படம் சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சிம்புக்கு அடுத்தபடியாக மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யாவின் சிறப்பான நடிப்பிற்கு ...