ரஜினிக்கு பயத்தை காட்டிய நெல்சன்.. மலைபோல நம்பினா இப்படித்தான் ஆகுமா!

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை இயக்குவதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் நெல்சன் திலீப்குமார், அதன் பிறகு வெள்ளித்திரையில் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த பின் அவருடைய இயக்கத்தில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது.

இன்னிலையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஒரு சில பிரச்சினை நிலவியதால், கரூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பீஸ்ட் திரைப்படம் நேற்று திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படத்தை விட கேஜிஎஃப் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நூறு சதவீதத்திற்கும் மேல் பூர்த்திசெய்து ஒரே நாளில் 300 இடங்களில் திரையிடப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களிலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்க போகிறதாம். இவ்வாறு பீஸ்ட் திரைப்படத்தின் வசூல், கேஜிஎஃப் 2 திரைப்படத்தினால் சரியாக அடி வாங்கப் போகிறது. அதுமட்டுமின்றி பீஸ்ட் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இதனால் நெல்சன் திலீப்குமார் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். அதாவது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருந்தாலும் முக்கியமாக ரஜினி 169 படத்தில் நெல்சன் கமிட்டாகி இருந்தது அனைவருக்கும் தெரியுமே.

அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. ஆனால் தற்போது பீஸ்ட் படம் படுதோல்வி அடையும் சூழ்நிலையில் இருப்பதால், அடுத்த ரஜினி 169 படத்தை தொடங்குவது சந்தேகம்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.