முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்டு தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தலைவி திரைப்படம்.

இயக்குனர் விஜய் அவர்களின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கியது தலைவி திரைப்படம். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர் .எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி, நாசர், ராதாரவி போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப நடிகர்களை தேர்ந்தெடுத்து அதில் திரைப்பட குழுவிற்கு பாராட்டுகளை தெரிவிக்கவேண்டும். உடை , மொழி போன்றவற்றிலும் நேர்த்தியான விதத்தை கையாண்டுள்ளனர்.

சரித்திரப் படங்களை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து அழகாக திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஏஎல் விஜய் ஜெயலலிதாவின் தைரியம் கம்பீரம் முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை மிகவும் அழகாகக் கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் அவமானங்கள் அதை எவ்வாறு நேர்மையாக மாற்றினார் என்று பல விஷயங்களையும் நுணுக்கமாக கூறியுள்ளார் இருப்பினும் நினைத்த அளவிற்கு வசூல் சாதனை இல்லை என்று கூறப்படுகிறது.

தலைவி திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரத்தியேகமாக ஞாயிற்றுக்கிழமை அன்று பார்த்தார் திரைப்படத்தை பார்த்த ரஜினி இயக்குனர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுகளை தெரிவித்தார் இதனால் திரைப்பட குழு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.