ரஜினிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த ரகுவரன்.. 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட படம்

தனது சிறந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தவர் ரகுவரன். தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவாராம், அந்த அளவிற்கு சினிமா மேல் அவருக்கு இருந்த மோகம் என்றே கூறலாம்.

தமிழ் சினிமா அவரை வில்லனாக மட்டுமே பார்த்து பழகி விட்டது. ஆனால் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டுள்ளார் ரகுவரன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த பாட்ஷா படம் இன்றளவும் பேசப்பட்டு தான் உள்ளது.

1987ஆம் ஆண்டு ரகுவரன், மாதிரி, சரத்பாபு, பேபி ஷாலினி போன்ற பிரபல நடிப்பில் வெளிவந்த படம் மைக்கேல் ராஜ். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எழுதப்பட்டு பின் கால்ஷீட் இல்லாததால் ரகுவரன் நடித்து கிட்டத்தட்ட நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.

இந்தப் படத்தில் சிறந்த நடிகருக்கான விருதை டாக்டர் கலைஞர் கருணாநிதியிடம் பெற்றார் ரகுவரன். இந்த படத்தின் வெற்றியை வைத்து மீண்டும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனித்திறமையுடன் நடித்து மக்கள் மனதில் எளிதாக இடம் பிடித்துவிடுவார் ரகுவரன். இவரை சைக்கோ நடிகர் என்றும் கூறுவார்கள் ஏனென்றால் அந்த படம் முடியும் வரை அந்த கதாபாத்திரமாக நிஜ வாழ்க்கையிலும் இருப்பாராம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்தார் ரகுவரன். இப்படிப்பட்ட கலைஞனை தமிழ் சினிமா இழந்தது இன்று வரை பெரும் இழப்பு தான்.

ஹெல்மெட் போட்டு வெளிவந்த அஜித் மகன் ஆத்விக் புகைப்படம்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் மிகவும் எளிமையாக அனைவரிடமும் பழகக்கூடியவர் தல அஜித். ரசிகர்கள் அஜித்துடன் போட்டோ எடுக்க விரும்பினால் முகம் சுழிக்காமல் இன்முகத்துடன் அவர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வார். அஜித் ...