ரஜினிக்காக தரமான சம்பவத்தை இயக்கும் நெல்சன்.. இணையத்தில் கசிந்த தலைவர்-169 டைட்டில்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் இருந்தாலும் ரஜினி என்ற ஒரு மனிதனுக்கு மட்டுமே படம் பார்த்து வசூல் சாதனை படைக்க வைத்தனர். அதனால் ரஜினிகாந்த் தற்போது ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 169 படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. முதல்முறையாக ரஜினிகாந்துடன் நெல்சன் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த்க்காக நெல்சன் கதையில் சில மாற்றங்கள் செய்து உள்ளதாகவும். இப்படத்தில் எந்த ஒரு பாடலும் இல்லாமல், ஒரு சில சென்டிமென்ட்டும் காட்சிகளும் எடுக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

நீங்க படத்தில் முக்கியமாக ரஜினி மோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இன்டர்நேஷனல் டான் அளவிற்கு இந்த கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு கெத்தான பெயரை வைக்க வேண்டுமென நெல்சன் முடிவு செய்துள்ளார்.

தற்போது தலைவர் 169 திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பாஸ் என்று பெயர் வைக்கலாம் என கூறிவருகிறார் நெல்சன். 2006ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொட்டை பாஸ் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

அந்த கேரக்டர் இன்றளவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது தலைவர் 169 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் ஆக கலக்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.