ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அருண் விஜய்யின் பார்டர்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.?

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் அருண் விஜய். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலமே அருண் விஜய் கவனம் ஈர்க்கப்பட்டார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஈரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அறிவழகன். முதல் படமே மாறுபட்ட கதைகளத்தில் அமைந்திருந்ததால், படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய வெற்றி படங்களை அறிவழகன் வழங்கினார்.

குற்றம் 23 படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அறிவழகன் – அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம்தான் பார்டர். பார்டர் படத்தில் துணிச்சலான மற்றும் சவாலான புலனாய்வு துறை அதிகாரியாக நடித்துள்ள அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சமீபகாலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை அறிந்து அதற்கேற்ப கதைகளை தேர்வு செய்து அருண் விஜய் நடித்து வருகிறார். அந்த வகையில் பார்டர் படமும் நிச்சயம் சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பார்டர் படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பார்டர் படம் தவிர அருண் விஜய் யானை, சினம், பாக்ஸர் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஓ மை டாக் என்ற படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதைக்கு ஏத்த ராமனாக மாறிய விக்னேஷ் சிவன்.. ஆத்துல போற தண்ணிய யார் குடிச்சா என்ன சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. நயன்தாரா, சமந்தா என்ற இரண்டு பெரிய ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களிடம் ...