ரசிகர்களை வெறுப்படையச் செய்த கார்த்திக்கின் 5 படங்கள்.. இதுனால தான் கேரியரே போச்சு

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். அப்போதைய காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான ரசிகர்களை வைத்துள்ளவர் கார்த்திக். ஆனால் இவர் தேர்ந்தெடுத்த படங்களால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. இவர் நடிப்பில் வெளியாகி பிளாப் ஆன ஐந்து படங்களை பார்க்கலாம்.

கலக்கற சந்துரு: கார்த்திக், புவனா, ராதா ரவி, பாண்டியராஜன் ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை படமாக வெளியான திரைப்படம் கலக்குற சந்துரு. இப்படத்தை ரவி ராஜா இயக்கியிருந்தார். இப்படத்தில் கார்த்திக் வக்கீலாக சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

குஸ்தி: பிரபு, கார்த்திக், வடிவேலு, புளோரா, விஜயகுமார், ராதாரவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குஸ்தி. இப்படத்தில் கார்த்திக் ரவுடி சிங்கமாக நடித்திருந்தார். இப்படத்தில் கார்த்திக் தேர்ந்தெடுத்த கதாபாத்திரமே அவருக்கு எதிர்வினையாக அமைந்தது. இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

மனதில்: கார்த்திக், கௌசல்யா நடிப்பில் 2004 இல் வெளியான திரைப்படம் மனதில். இப்படத்தில் கார்த்திக் சிவா, அக்னி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்திற்கு வரணி இசையமைத்திருந்தார். இப்படம் கார்த்திக் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

லவ்லி: கார்த்திக், மாளவிகா, விவேக் நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கிய படம் லவ்லி. இப்படத்தில் கார்த்திக் சந்துருவாக நடித்திருந்தார். நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெற்றி பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

குபேரன்: கார்த்திக், கௌசல்யா, மந்த்ரா, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரன். இப்படத்தில் கார்த்திக் குபேரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய தந்தையாக மணிவண்ணன் நடித்திருந்தார். இப்படத்திற்கு ராஜ்குமார் இசையமைத்திருந்தார். குபேரன் படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.