ரசிகர்களை தியேட்டரிலிருந்து விரட்டியடித்த அஜித், விஜய்யின் 2 படங்கள்.. மறக்கமுடியாத அந்த ஒரு நாள்

தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே போட்டி இருக்கும். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து ரஜினி, கமல் என தற்போது விஜய், அஜித் வரை இரு நடிகர்களின் ரசிகர்கள் இடையே போட்டி இருக்கிறது.

விஜய், அஜித் படங்கள் வெளியாகிறது என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதே சமயத்தில் ஒரே நேரத்தில் இரு நடிகர்களின் படங்கள் வெளியானால் போட்டி அதிகமாக இருக்கும். ஆனால் 2006 இல் பொங்கல் அன்று விஜய், அஜித் என இரு நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

எஸ் ஏ சந்திரசேகர் தயாரிப்பில் விஜய், திரிஷா, விவேக் ஆகியோர் நடிப்பில் 2006 இல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஆதி. இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

2004இல் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படம் மெகா ஹிட்டானது. மீண்டும் இதய ஜோடி ஆதி படத்தில் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் ஆதி படம் வெளியான பிறகு விஜய் ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது.

அதேபோல் இதே ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரமசிவன். இப்படத்தில் அஜித், லைலா, பிரகாஷ்ராஜ், விவேக் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அஜித்தின் பரமசிவன் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படம் வெளியாவதால் யார் படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் இரண்டு படமும் அட்டர் பிளாப் ஆனது. இந்த ரெண்டு நடிகர்களின் படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.