யோகி பாபுவுடன் ஹிட் கொடுத்தாச்சு.. அடுத்தது வடிவேலுடன் களமிறங்கும் பிரபலம்

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ள வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் படத்தின் தலைப்பிற்கு ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தது.

அதாவது முதலில் படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைத்திருந்தனர். ஆனால் சதீஷ் நடிக்கும் படத்திற்கு இந்த தலைப்பு பயன்படுத்தப்பட்டது. அதனால் வடிவேலு நேரடியாக தயாரிப்பாளரிடம் இந்த தலைப்பை கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் படத்தின் தலைப்பை தர மறுக்க வடிவேலு வேறுவழியின்றி ஒரு சிறிய வார்த்தையை சேர்த்து நாய் சேகர் ரிட்டன் என தன் படத்திற்கு பெயர் வைத்தார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு வடிவேலு படத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் காமெடியில் வடிவேலு அசத்த கூடியவர். அதேபோல் சுராஜ் காமெடி படங்களை இயக்குவதில் திறமையானவர். இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால் கண்டிப்பாக இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

டாக்டர் படத்தில் நடித்த ரெடின் கிங்ஸ்லி நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் படத்தில் நடித்த ரெடிங் கிங்ஸ்லி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது வடிவேலுவும் இவரும் இணைந்து நடித்தால் கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும் என கூறி வருகின்றனர்.

வடிவேலு படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளதால் தொடர்ந்து பல இயக்குனர்களும் தங்கள் படங்களில் நடிக்குமாறு கூறி வருகின்றனர். ஆனால் வடிவேலு முதலில் இப்படம் வெளிவந்த பிறகு தனது வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது பார்த்து மற்ற படங்களில் நடிப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஒரு சிலர் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகருடன் நல்ல வரவேற்பைப் பெற்றால் அதன் பிறகு வடிவேலு தனது படத்தின் மீதான சம்பளத்தை உயர்த்துவதற்காக தான் எந்த படத்திலும் நடிக்க சம்மதிக்காமல் இருக்கிறார் என கூறி வருகின்றனர்.